search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோதனை வெற்றி"

    • டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனையை நடத்தி வந்தது.
    • ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.

    பிஜிங்:

    செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை கொண்டு வர சீனா ஆய்வு மேற்கொண்டது.

    இதற்காக டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனனையை நடத்தி வந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தரையில் செல்போன் கோபுரங்கள் இல்லாமல் செல்போன்களில் பேசலாம் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட் போன் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தனர். இதன்மூலம் ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.

    தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாக செயற்கை கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட எந்த இடையூறும் இன்றி தொலை தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனால் இத்திட்டம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • ஏவுகணையின் துல்லியம், செயல்முறையின் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • ‘அக்னி பிரைம்’ ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் நவீன 'அக்னி பிரைம்' ஏவுகணை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் மாலை இந்த பரிசோதனை நடந்ததாகவும், பரிசோதனையின் போது ஏவுகணையின் அனைத்து அம்சங்களும் வெற்றிகரமாக செயல்பட்டதாகவும் மத்திய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஏவுகணையின் துல்லியம், செயல்முறையின் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையை ராணுவ தளபதி அனில் சவுகான் உள்பட பாதுகாப்பு படைகளின் மூத்த அதிகாரிகளும், டிஆர்டிஓ அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டனர்.

    'அக்னி பிரைம்' ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். 

    ×